சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா

தேவையான பொருட்கள் :

  • உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்),
  • துருவிய சீஸ் – ஒரு கப்,
  • சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
  • கெட்டித்தயிர் – அரை கப்,
  • சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
  • ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும்.
  • வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.
  • வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
  • தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.
  • சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker