சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான நெத்திலி மீன் தொக்கு
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- நெத்திலி மீன் – கால் கிலோ
- சாம்பார் வெங்காயம் – 10
- தக்காளி – 4
- மிளகாய் – 4
- மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
- பூண்டு – 4 பல்
- கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
- சீரகம், வெந்தயம் – கால் டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு – தேவைக்கு
- புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
- தேங்காய் பால் – கால் கப்
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
- நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
- கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
- பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
- அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
- பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
- கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
- கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.