அழகு..அழகு..புதியவை

வெயிலால உடம்பில் அங்கங்கே கருமை நிறமும் கருந்திட்டுக்களும் இருக்கா… எப்படி சரி செய்யலாம்…

சரும நிறத்திட்டுகள் உடலில் தோன்றி ஆங்காங்கே காணப்படுவது சரும பிரச்சனைகளுள் ஒன்றாகும். இந்த சரும நிறத்திட்டுகள் அதிகப்படியான சூரிய ஒளி தாக்கத்தாலும் அழற்சி இவற்றாலும் ஏற்படுகிறது. இதை நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்கள் மூலம் சரி செய்ய முடியும்.

உங்க உடலில் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் அதை கவனிப்பது மிகவும் அவசியம். சரும நிறத்திட்டுகளை நிறைய பேர்கள் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். ஆனால் அது உங்களுக்கு பின்னாளில் பிரச்சினையை உண்டாக்கலாம். ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான தோல் பிரச்சினை ஆகும். இந்த நிறத்திட்டுகள் உங்க உடலில் கரு நிறப்புள்ளிகளை உண்டாக்கும். ஆங்காங்கே காணப்படும் கருமையை நீக்க நீங்களும் எவ்வளவோ முயற்சிகளை செய்து இருப்பீர்கள். க்ரீம்கள், அழகு சாதனப் பொருட்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தியும் உங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் சரும நிறத்திட்டுகளை தடுப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

​சூரியனிடம் இருந்து உங்க சருமத்தை எப்படி பாதுகாப்பது

சூரியக் கதிர்கள் தான் சரும நிறத்திட்டுகளை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சூரியனின் கடுமையான கதிர்கள் உங்கள் சருமத்திற்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் உட்பட அனைத்து வகையான சேதங்களையும் செய்கின்றன. சூரியனின் வெளிப்பாடு உடலில் மெலனின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது உங்கள் சருமத்தில் கருமைக்கு வழி வகுக்கும். எனவே உங்க சருமத்தை பாதுகாக்க வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோசனை தடவுங்கள். உங்க கைகள், கால்கள் மற்றும் சூரிய ஒளி வெளிப்படும் இடங்களில் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.

​சரும எரிச்சல்

உங்க சருமம் எளிதில் அழற்சி அடையக்கூடியதாக இருந்தால் கவனமுடன் இருங்கள். எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை உங்களுக்கு சரும நிறத்திட்டுகளை ஏற்படுத்தும். எனவே சருமத்திற்கு ஊட்டமளிப்பது அவசியம். உங்க சருமத்திற்கு ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை மட்டுமே முயற்சி செய்யுங்கள். ஏதேனும் பொருட்கள் உங்களுக்கு அலற்சியை ஏற்படுத்துகிறதா என்பதை கவனியுங்கள்.

​வயதுக்கு ஏற்ப சரும பராமரிப்பு மாறுபடுமா

வயதாக வயதாக சருமத்தின் மெலனின் உற்பத்தி ஆனது பாதிக்கப்படுகிறது. இது தோலை மிகவும் கருமையாக்கி விடும். எனவே வயதான காலத்தில் சீரம் மற்றும் வயதான எதிர்ப்பு சரும தயாரிப்புகள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​கற்றாழை ஜெல் தடவுங்கள்

கற்றாழை ஜெல் உங்க சருமத்திற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். இது சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. கற்றாழை ஜெல்லின் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்திற்கு சிறந்த ஈரப்பதத்தை தருகிறது. கற்றாழை ஜெல்லின் குணப்படுத்தும் தன்மை சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. சரும புதுப்பித்தலை அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கற்றாழை ஜெல் தடவி உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்து விட்டு விடுங்கள். இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு பல முறை என செய்து வாருங்கள். சரும பாதிப்பு தொடர்ந்தால் உங்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker