சமையல் குறிப்புகள்புதியவை
ஹோட்டல் ஸ்டைல் சில்லி கார்லிக் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :
- நூடுல்ஸ் – அரை கப்,
- நறுக்கிய வெங்காயம் – அரை கப்,
- குடைமிளகாய் – 1
- கேரட் – அரை கப்,
- இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
- கொத்தமல்லி – சிறிதளவு,
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு – தேவையான அளவு.
சில்லி கார்லிக் நூடுல்ஸ்
செய்முறை:
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும். குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும். நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.