புதியவை

சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள் பேஸ் மாஸ்க்

கரித்தூள் பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது.

சருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள் பேஸ் மாஸ்க்

கரித்தூள் பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது. கரித்தூளை எப்படி தயார் செய்வது என்பது பற்றி முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.

நீங்கள் கரித்தூள் தயாரிக்க எல்லாம் நேரம் இல்லை என்று கருதினால், ஆக்டிவேட்டேட் சாக்ரோல் கேப்சூல் (activated charcoal capsule) ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue) 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் ( தேங்காய் ஒட்டில் இருந்து எடுக்கப்பட்டது) பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்

முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். நான்-டாக்சிக் ஒயிட் க்ளூவிற்கு பதிலாக நீங்கள் தேன் அல்லது முல்தானி மட்டியை இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை அப்ளை செய்த உடன் கைகளால் தொட்டு பார்த்து அசைக்க வேண்டாம். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைப்பது உறுதி…!

உங்களது முகத்தின் ஒரு சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து பாருங்கள். எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டானால் இந்த மாஸ்க்கை நீங்கள் உபயோக்கிக்க வேண்டாம். இந்த மாஸ்க்கை நீங்கள் தாரளமாக வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் அத்தனையும் நீங்கி முகம் புதுப்பொலிவு பெரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker