சமையல் குறிப்புகள்புதியவை

காரசாரமான சில்லி முட்டை மசாலா

தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சில்லி முட்டை மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான சில்லி முட்டை மசாலா

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 2
  • பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • கிராம்பு, பூண்டு – 2
  • உப்பு – சுவைக்கேற்ப
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

சில்லி முட்டை மசாலா

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

சில்லி முட்டை மசாலா ரெடி!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker