அழகு..அழகு..புதியவை

சில்கி ஹேர் வேணுமா எல்லாவகை கூந்தலுக்கும் இந்த இரண்டு பொருள் போதும், இப்படி யூஸ் பண்ணுங்க!

வறட்சியான முடி, பிசுபிசுப்பு முடி, எண்ணெய் பசை முடி, மெலிந்த முடி, சுருள் முடி, மென்மையான முடி, இலேசான காற்றிலும் பரட்டையாய் பறக்கும் முடி அனைவருக்கும் உதவும் ஒரு ஹேர் பேக் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

கூந்தல் சுத்தமாக இருந்தாலே கூந்தல் பிரச்சனை வராமல் காக்க முடியும். ஆனால் இப்போதைய சூழலில் வெளியில் இருக்கும் அதிக மாசுக்களால் சருமமும், கூந்தலும் பாதிப்படையவே செய்கிறது. என்னதான் பராமரிப்பு செய்தாலும் கூந்தலை அழகுப்படுத்த முடியவில்லை என்று சொல்லி பல பராமரிப்பு பொருள்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் இருக்கும் அடர்த்தியம் அழகும் கூட போய்விடுகிறது.

தற்போது கூந்தல் ஹேர் பேக் போடுவதன் மூலம் கூந்தலை அழகுபடுத்தமுடியும் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். அந்த வகையில் வீட்டிலேயே போடக்கூடிய இந்த ஹேர் பேக் குறித்து பார்க்கலாம். நாளை ஞாயிறுதானே ட்ரை செய்யுங்களேன்.

​கூந்தல் ஹேர் பேக்

தேவையானவை

  1. வாழைப்பழம் – 2 ( நன்றாக பழுத்தது)
  2. தேங்காய்ப்பால் – 1 கப் ( முதல் பால்)

இளம் தேங்காயாக இல்லாமல் அடர்ந்த பருப்பு நிறைந்த காயில் எடுக்கும் முதல் பாலை பயன்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழம் நன்றாக பழுத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தை தோல் உரித்து மிக்ஸியில் அடிக்கவும். தண்ணீர் ஊற்றாமல் தேங்காய்ப்பாலை மட்டுமே பயன்படுத்தி அரைக்கவும். நன்றாக மசித்ததும் அதில் வைட்டமின் இ ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை ஒரு டீஸ்பூன் அளவு சேர்க்கவும். எளிமையான ஆனால் அற்புதமான சூப்பர் ஹேர் பேக் ரெடி..

​கூந்தலுக்கு போடும் முன்

கூந்தலுக்கு பயன்படுத்தப்படுத்துவதற்கு முன்பு கூந்தலை அழுக்கில்லாமல் வைத்திருப்பது அவசியம். தலைக்கு குளித்த பிறகு இந்த பேக் பயன்படுத்த வேண்டும். அல்லது இந்த ஹேர் பேக் போடுவதற்கு முன் தினம் தலைக்கு குளித்தாலும் போதும்.

கூந்தலை சிக்கில்லாமல் சீவி கொள்ள வேண்டும். கூந்தலை பார்ட் பார்ட் ஆக பிரித்து வெறும் கைகளாலேயே கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேர்ப்பகுதி வரை தடவவேண்டும். நன்றாக நுனிவரை தடவி தேங்காய்ப்பால் வழிந்துவிடாமல் இருக்கும்படி பேஸ்ட் இருந்தாலும் கூட ஹேர் பேக் போட்டு கூந்தலை கட்டிவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை மென்மையாக அலசி எடுக்கவும். தலையை சுத்தம் செய்த பிறகு இந்த ஹேர் பேக் போடுவதால் கூந்தலுக்கு மீண்டும் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கலாம். வாரம் ஒருமூறை என்று 4 முறை செய்தாலே கூந்தல் மின்னுவதை பார்க்கலாம்.

மென்மையாகும் முடி

வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீஷியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, ட்ரிப்டோபான், கால்சியம், நார்ச்சத்து நிறைந்தது. இந்த சத்துகள் கூந்தலுக்கும் கிடைக்கும் என்பதால் கூந்தல் பிரச்சனை இல்லாமல் காக்கப்படுகிறது. இவை உடலுக்கு போன்றே கூந்தலுக்கும் சருமத்துக்கும் நன்மை செய்கிறது. கொழ கொழப்பாக இருக்கும் வாழைப்பழத்தால் கூந்தலை அழகாக வைத்திருக்க முடியும் என்பதை ஒருமுறை பயன்படுத்தினாலே போதுமானது. முடி எவ்வளவு வறட்சியாக இருந்தாலும் மாறி மென்மையாக இருக்கும்.

​சில்கி ஹேராக மாறுவது எப்படி

தேங்காய்ப்பால் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் இயற்கை பொருள். இரும்புச்சத்து, கால்சிய்ம, செலினியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பல வைட்டமின்கள் அடங்கிய சத்துகளை கொண்டவை.

தேங்காய்ப்பால் மெலிந்த கூந்தலை மேலும் மெலிவாக்காமல் தடுத்து நிறுத்தகூடியது. எதுவுமே இல்லையென்றாலும் வெறும் தேங்காய்ப்பாலை கொண்டு இயற்கை கண்டிஷனராக பயன்படுத்தினாலே போதும். ஹேர் பேக் காலங்கள் தவிர்த்து ஷாம்புவில் சரிபாதி தேங்காய்ப்பால் கலந்து பயன்படுத்தினாலே போதுமானது. கூந்தல் மினுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker