சமையல் குறிப்புகள்புதியவை

வீட்டிலேயே கிரில்டு இறால் செய்யலாம் வாங்க

வீட்டிலேயே கிரில்டு இறால் செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

  • இறால் – 500 கிராம்
  • பூண்டு – 5 பெரியது
  • எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

  • இறலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இறாலுடன் நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
  • பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
  • இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  • பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  • பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker