தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

இந்த பொருட்கள் உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தெரியுமா?

குழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று பரம்பரை காரணமாக வருவது. இன்னொன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்னை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.

அதுபோல சில சுற்றுச்சூழல் காரணிகளும் அலர்ஜி ஆபத்தை அதிகரிக்கக்கூடும். 2013 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உணவு அலர்ஜி பிரச்சனை 1997 மற்றும் 2011 க்கு இடையில் 3.4 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், 18 வயதிற்குட்பட்டவர்களிடையே தோல் ஒவ்வாமை 7.4 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு என்னென்ன அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்தும் பார்ப்போம்.

1 பால் மற்றும் முட்டை அலர்ஜி

பால் மற்றும் முட்டைகள் சிறு குழந்தைகளிடம் ஏற்படும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஆகும். பால் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறல், வாந்தி, தோலில் அரிப்பு மற்றும் செரிமான வரை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முட்டை அலர்ஜி பொதுவாக தோல் வெடிப்பு, தோலில் அரிப்பு, மூக்கில் அரிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.

2. வேர்க்கடலை அலர்ஜி

சில குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். வேர்க்கடலை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு தோல் அரிப்பு ஏற்படும். இப்படி ஏற்படும் அரிப்பு சில நேரங்களில் அதிக தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். பெற்றோர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும்.

3. நட்ஸ் வகைகள் அலர்ஜி

இது பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படுவதல்ல. பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது அனைத்து பருப்பு வகைகளுக்கும் பொருந்தாது. பெரியோர் எந்த பருப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுகிறது என பார்த்து அவைகளை தவிர்க்க வேண்டும்.

4. மீன் அலர்ஜி

பொதுவாக கடல் மற்றும் ஏரி மீன்கள் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளான நண்டு, இறால், சிப்பி போன்றவை குழந்தைகளிடம் அலர்ஜியை ஏற்படுத்தும். மீன் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள புரதங்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்படும்போது இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் வாந்தி, வீக்கம், தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

5. சோயா ஒவ்வாமை

பொதுவாக இந்த ஒவ்வாமை குழந்தை பருவத்திலேயே தோன்றும். இதன் அறிகுறிகள் பொதுவாக வாயில் ஏற்படும் நமைச்சல், அரிப்பு மற்றும் புண்கள் ஆகும். சோயா ஒவ்வாமை ஏற்படும் போது சோயாவைக் கொண்டு தாயரிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

6. பருவகால ஒவ்வாமை

பருவகால ஒவ்வாமை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகளை பாதிக்கிறது. இது ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு நமைச்சல், கண்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுதல், மூக்கு ஒழுகுதல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.

படை நோய் அல்லது தோல் அரிப்பு, தோலழற்சி , நமைச்சல் , தோல் தடிப்புகளும் பருவகால ஒவ்வாமைகளால் ஏற்படுகிறது. அதுபோல பல வாரங்கள் நீடிக்கும் சளி, ஜலதோஷம் அல்லது குளிர் அறிகுறிகள் உண்மையில் தொற்றுநோய்க்கு பதிலாக ஒவ்வாமையாக இருக்கலாம். எனவே இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் குழந்தையை காண்பியுங்கள்.

7. செல்லப்பிராணி ஒவ்வாமை

உங்கள் குழந்தைக்கு செல்லப்பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்படுவதை தெரிந்திருக்க மாட்டீர்கள். குறிப்பாக செல்லப்பிராணிகள் உரோமம் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்தும்.”பூனை அல்லது நாயின் தோல் செல்கள், உமிழ்நீர், சிறுநீர், முடிகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

8. தோல் ஒவ்வாமை

பருவகால ஒவ்வாமை, செல்லப்பிராணிகள், உணவு, மருந்து மற்றும் பலவற்றால் தோலில் அழற்சி, அரிப்பு,தோல் வெடிப்பு, தோல் தடித்தல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் தோலில் ஏற்படலாம். தோல் நோய் சில நேரங்களில் வைரஸ்கள் அல்லது தொற்றுநோய்களால் ஏற்படலாம். எனவே குழந்தைகள் தோல் நோயால் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker