எடிட்டர் சாய்ஸ்புதியவை

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விஷயங்கள்

பெண்கள் முதல் சந்திப்பிலேயே ஆண்களின் சுபாவங்களையும், அவர்களின் ‘பெர்ஷனாலிட்டி’யையும் மதிப்பீடு செய்துவிடுவார்கள். தாங்கள் நேசிக்கும் நபர் நேர்த்தியாக ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அலங்காரத்திலும் நேர்த்தி வெளிப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பெண்கள் எப்போதும் ஆண்கள் விஷயத்தில் கவனிக்கும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* தங்கள் மனம் கவர்ந்தவர் அழகாக தலைமுடியை சீவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பயண களைப்பில் தலைமுடியும் கலைந்திருந் தாலும் தன்னை பார்க்கும் சமயத்தில் அழகாக தோன்றவேண்டும் என்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதுபோல் தாடி வளர்ப்பவராக இருந்தால் அதனை நேர்த்தியாக ‘டிரீம்’ செய்திருக்க வேண்டும். அதனை தவறாமல் பராமரித்து வருகிறாரா? என்பதிலும் கவனம் செலுத்துவார்கள். தலை முடியை நீளமாக வளர்த்திருந்தால் அழகாக வும், அழுக்குபடியாமல் சுத்தமாகவும் பராமரித்துவர வேண்டும்.

* ஆண்கள் பெரும்பாலும் கைவிரல் நகங்களை வெட்டுவதற்கு அக்கறை கொள்ளமாட்டார்கள். நகங்களை ஒழுங் காகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கைகளை உலரவிடவும் கூடாது. ஈரப்பதத்தை தக்கவைப்பதற் கான மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தி வருவது நல்லது.

* ஆண்களின் உடற்கட்டுவையும் பெண்கள் கவனிப்பார்கள். உடல் எடையை சீராக பராமரித்துவர வேண்டும். திடீர் எடை இழப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் ஒட்டுமொத்த உடற்கட்டும் அழகு இழந்து போய்விடும். தவறாமல் உடற்பயிற்சி செய்துவரவும் வேண்டும். அதுதான் ஆரோக்கியத்தையும், அழகையும் தீர்மானிக்கும்.

* பெண்களுடன் பேசும் வார்த்தை களையும், உச்சரிக்கும் தொனியையும் கவனமாக கையாள வேண்டும். பேசும் விதமும், பயன்படுத்தும் சொற்களும்தான் ஒருவருடைய பெர்ஷனாலிட்டியை முடிவு செய்யும். அதற்காக மிகைப்படுத்தும் விதமான உச்சரிப்பை மேற்கொள்ளக்கூடாது. இயல்பான பேச்சும், நேர்மறையான எண்ணங்களும் எளிதில் பெண்கள் மனதில் இடம்பிடிக்க வைத்து விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker