சமையல் குறிப்புகள்புதியவை

குழந்தைகள் விரும்பும் சேமியா பகாளாபாத்

தேவையான பொருட்கள்

  • சேமியா – 100 கிராம்
  • தயிர் – 50 கிராம்
  • பால் – 50 மில்லி
  • இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • திராட்சை, மாதுளை முத்துக்கள் – ஒரு கைப்பிடி
  • ஆப்பிள் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
  • இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
  • இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.
  • சுவையான சேமியா பகாளாபாத் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker