நீங்கள் எவ்வளவு நினைவாற்றல் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாமா?
நீங்கள் எவ்வளவு நினைவாற்றல் கொண்டவர் என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை இது. இங்கே பத்து கேள்விகள் தரப்படுகின்றன. அதை படியுங்கள்! மறதியின் அளவை மதிப்பீடு செய்யலாம்!
1. செய்யவேண்டிய வேலைகள் அடிக்கடி மறந்துபோகிறதா?
ஆம்.. இல்லை..
2. ஏற்கனவே சென்ற இடங்களை காணும்போதும், ஏற்கனவே சந்தித்தவர்களை பார்க்கும்போதும் அவர்களை பற்றிய நினைவுகள் வருவதில்லையா?
ஆம்.. இல்லை..
3. அன்றாட வழக்கமான வேலைகளை செய்யவே மறந்துபோய் விடுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
4. சமீபகாலங்களில் நடந்த சம்பவங்கள் கூட மறந்துபோகிறதா?
ஆம்.. இல்லை..
5. ஒருவரை சந்திக்கும்போது அவருடன் பேசவேண்டிய முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டதுபோல் உணர்கிறீர்களா?
ஆம்.. இல்லை..
6. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்த இடம் தெரியாமல் அலைபாய்கிறீர்களா?
ஆம்.. இல்லை..
7. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ரொம்பவும் சிரமப்படுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
8. முக்கியமான விஷயம் பற்றி பேசும்போது அது நினைவில் வராமல் தடுமாறிய அனுபவம் உண்டா?
ஆம்.. இல்லை..
9. நெருக்கமான நண்பர்களின் பெயர் கூட உடனடியாக நினைவில் வராமல் திணறுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
10. வெளியே செல்லும்போதும் பழக்கப்பட்ட பாதைகள் கூட மறந்ததுபோல் இருக்கிறதா?
ஆம்.. இல்லை..
அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதில் எது என்று ‘டிக்’ செய்யுங்கள்.
‘ஆம்’ என்பது இரண்டும், ‘இல்லை’ என்பது 8-ம் இருந்தால் உங்களுக்கு போதுமான நினைவாற்றல் இருக்கிறது.
அனைத்துக்கும் ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால் நீங்கள் நினைவாற்றல் குறைபாடு அதிக அளவு கொண்டவர்கள் என்ற பட்டியலில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.