சமையல் குறிப்புகள்புதியவை

பீட்ரூட் கோதுமை கஞ்சி

தேவையான பொருட்கள் :

  • பீட்ரூட் – கால் கப்
  • கோதுமை கஞ்சி மாவு – 4 டேபிள்ஸ்பூன்
  • சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளிச் சாறு – கால் கப்
  • இஞ்சி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப.



கோதுமை கஞ்சி மாவு செய்ய:

  • முழு சம்பா கோதுமை – கால் கிலோ
  • எள் – 50 கிராம்
  • பொட்டுக்கடலை – 150 கிராம்



(கோதுமை எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு நீண்ட நாள் பயன்படுத்தலாம்).

செய்முறை:

  • ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பீட்ரூட்டை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும்.
  • கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி வெந்த பீட்ரூட் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
  • சத்தான பீட்ரூட் கோதுமை கஞ்சி ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker