சமையல் குறிப்புகள்புதியவை

முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா

தேவையான பொருட்கள் :

  • முளைகட்டிய பச்சைப்பயறு – ஒரு கப்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
  • சர்க்கரை நீர் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
  • உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.



தாளிக்க:

  • எண்ணெய் – 3 டீஸ்பூன் க
  • டுகு – சிறிதளவு
  • பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
  • கீறிய பச்சை மிளகாய் – 2.

அலங்கரிக்க:

  • நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்.
  • பச்சைப்பயறு



செய்முறை:

  • இஞ்சி, ப.மிளகாயை தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்
  • முளைகட்டிய பச்சைப்பயறு சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  • இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்த பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு, சேர்த்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்).
  • ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
  • தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி நன்கு குலுக்கிவிடவும்.
  • நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த்துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker