சமையல் குறிப்புகள்புதியவை

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

தேவையான பொருட்கள் :

  • புளி கரைச்சல் – 2 மேசைக்கரண்டி
  • தக்காளி- 1
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
  • பூண்டு – 6 பல்
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – சுவைக்க
  • மஞ்சள் – அரை தேக்கரண்டி
  • கடுகு- 1 தேக்கரண்டி
  • எண்ணெய்- 1 தேக்கரண்டி



செய்முறை :

  • கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..
  • 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.
  • அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.
  • கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.
  • தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.
  • இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.
  • சுவையான மிளகு ரசத்தை சூப் ஆகவோ, சதத்துடனோ சாப்பிடலாம்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker