சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான ரசம் இட்லி சாப்பிடலாம் வாங்க
தேவையான பொருட்கள் :
- இட்லி – 5
ரசம் வைக்க :
- தனியா – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 3
- மிளகு – 6
- துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
- கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – சிறிதளவு
- தக்காளி – 1/2 கப்
- புளி தண்ணீர் – 1/4 கப்
- மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
- பெருங்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
- உப்பு – தே. அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.
- தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்ளவும்.
- அடுத்து தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
- அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.
- பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள்.
- அருமையாக இருக்கும் இந்த ரசம் இட்லி.