சமையல் குறிப்புகள்புதியவை

நோய் எதிர்ப்பு சக்தி தரும் ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்

தேவையான பொருட்கள்

 • சாதம் – 1 கப் வடித்த,
 • புளிக்காத தயிர் – 50 மி.லி. ,
 • ஆறவைத்த பால் – 100 மி.லி. ,
 • உப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு,
 • உலர்ந்த கறுப்பு திராட்சை – 1 மேஜை கரண்டி ,
 • எண்ணெய் – 2 தேக்கரண்டி,
 • கடுகு அரை – தேக்கரண்டி ,
 • மாதுளை முத்துக்கள் – 100 கிராம் ,
 • நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் – 3 மேஜை கரண்டி ,
 • வெள்ளரி துண்டுகள் – 3 மேஜை கரண்டி
 • திராட்சை பழம் – 2 மேஜை கரண்டி நறுக்கிய ,
 • சீரகம் – 1 தேக்கரண்டி ,
 • இஞ்சி துண்டுகள் – 3 தேக்கரண்டி ,
 • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை .

செய்முறை:

 • நன்றாக வெந்த சாதத்துடன் உப்பு மற்றும் பாலை ஊற்றி பிசையவும். சாதம் சூடாறிய பின்பு தயிரை சேர்த்து பிசைய வேண்டும்.
 • வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன் அனைத்து பழவகைகளையும் சேர்த்து கிளறி, புளிக்கும் முன்பே சாப்பிடவும்.
 • அருமையான ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker