சமையல் குறிப்புகள்புதியவை

மாங்காய் இனிப்பு ஊறுகாய்

தேவையான பொருட்கள்

  • பொடியாக நறுக்கிய (அ) துருவிய மாங்காய் – ஒரு கப்,
  • சர்க்கரை – ஒரு கப்,
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
  • எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்த சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
  • கசகசாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
  • உப்பு – ஒரு டீஸ்பூன்,



செய்முறை:

  • கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் கட்டவும்.
  • வெயிலில் 10 முதல் 20 நாள் வைக்கவும்.
  • இதில் உள்ள சர்க்கரை கரைந்து லேகியம் மாதிரி ஆகிவிடும்.
  • இந்த பதத்தில் எடுத்து வைக்கவும். மாதக் கணக்கில் கெடாது.
  • சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker