சமையல் குறிப்புகள்புதியவை

ஃபிஷ் சப்பாதி ரோல்

தேவையான பொருட்கள் :

  • சப்பாத்தி – 4
  • முள் இல்லாத துண்டு மீன் – 500 கிராம்
  • வெங்காயம் – 2
  • இஞ்சிபூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை
  • எலுமிச்சைபழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
  • குடைமிளகாய் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – 1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • மீனை நன்றாக கழுவி கொள்ளவும்.
  • வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • நன்றாக கழுவிய மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு உதிர்த்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.
  • பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.
  • பச்சை வாசனை போனவுடன் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.
  • பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் சப்பாத்தி ரோல் ரெடி!!!





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker