சமையல் குறிப்புகள்

கேழ்வரகு மசாலா பூரி

தேவையான பொருட்கள் :

  • கேழ்வரகு மாவு – 2 கப்
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • ரவை – ஒரு டீஸ்பூன்
  • ப.மிளகாய் – 3
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • எண்ணெய் உப்பு – தேவையான அளவு.




செய்முறை:

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  • பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
  • சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker