சமையல் குறிப்புகள்

ஹோட்டல் ஸ்டைல் வான்கோழி கபாப்

தேவையான பொருட்கள்:

  • வான்கோழி கறி – அரை கிலோ
  • பச்சை மிளகாய் – 4
  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
  • சீஸ் – 2 டீஸ்பூன்
  • பொரித்த வெங்காயம் – ஒரு கைப்பிடி
  • துளசி இலை – 10
  • குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

 


செய்முறை :

  • துளசி இலை, ப. மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • அத்துடன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், சீஸ், பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய துளசி இலை அனைத்தும் சேர்த்து நன்றாக கலவ்து இரண்டு கத்திகளைக் கொண்டு நன்றாக கொத்திக் கொள்ளவும்.
  • இறுதியாக உப்பு, குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
  • தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
  • சுவையான வான்கோழி கபாப் ரெடி..!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker