சமையல் குறிப்புகள்

செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக்

இரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • செவ்வாழை : 1 (கனிந்தது)
  • பேரீச்சம்பழம் : 5
  • வால்நட் : 3
  • குளிர்ந்த பால் : 400 மி.லி.

செய்முறை :

  • செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.
  • கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
  • புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.
  • செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker