சமையல் குறிப்புகள்

சீஸ் வெஜிடபிள் ஆம்லெட்

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 3,
  • குடைமிளகாய் – 1,
  • முட்டைகோஸ் – 100 கிராம், (விருப்பப்பட்டால்)
  • கேரட் – கால் கப்,
  • பெரிய வெங்காயம் – 1,
  • பச்சை மிளகாய் – 3,
  • கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்,
  • சீஸ் – ஒரு சிறு கட்டி,
  • எண்ணெய் – தேவையான அளவு,
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
  • உப்பு – சுவைக்கேற்ப.




செய்முறை:

  • கேரட், முட்டை கோஸ், ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • சீஸை துருவிக்கொள்ளவும்.
  • முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.
  • அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.
  • விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.
  • சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker