சமையல் குறிப்புகள்

சூப்பரான மொச்சை சாம்பார்

தேவையான பொருட்கள் :

  • உலர் மொச்சை – 100 கிராம்,
  • சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
  • துவரம்பருப்பு – 100 கிராம்,
  • புளி – எலுமிச்சைப் பழ அளவு,
  • தேங்காய்த் துருவல் – சிறிய கப்,
  • கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
  • தனியா – ஒரு டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.



செய்முறை:

  • மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.
  • துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.
  • தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  • புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.
  • இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.
  • சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
  • கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
  • சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker