சமையல் குறிப்புகள்

சூப்பரான பிரைடு காளான் மசாலா

தேவையான பொருட்கள்

  • காளான் – 250 கிராம்
  • மைதா மாவு – கால் கப்
  • அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 4 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம், தக்காளி – தலா 2
  • இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
  • தக்காளி கெட்சப் – ஒரு டீஸ்பூன்
  • சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு



செய்முறை

  • காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
  • காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.
  • அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.
  • வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
  • மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
  • அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.
  • சூப்பரான பிரைடு காளான் மசாலா ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker