சமையல் குறிப்புகள்

சத்தான ஸ்நாக்ஸ் சிக்கன் மோமோஸ்

தேவையான பொருட்கள் :

மாவு பிசைய

  • மைதா – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்

பூரணம் செய்ய :

  • சிக்கன் – 300 கிராம்
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் – 1
  • மிளகு உடைத்தது – 1/4 டீஸ்பூன்



செய்முறை :

  • வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • சிக்கனை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும். உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.
  • அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக உதிர்த்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
  • அடுத்து அதில் சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.
  • மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்துவிடவும்.
  • ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டி தடுவில் தட்டையாக செய்துகொள்ளவும்.
  • செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் நடுவில் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.
  • இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும்.
  • அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
  • தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.
  • 15 – 20 நிமிடங்களுக்கு வேக வைத்து பரிமாறவும்.
  • சூப்பரான சுவையான சிக்கன் மோமோஸ் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker