ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் முத்திரை

ஒரு மனிதன் சுவாசிக்கும் பொழுது 7 லிட்டர் காற்று உள்ளே போய் 7 லிட்டர் காற்று வெளிவர வேண்டும். ஆனால் 7 லிட்டர் காற்று உள்ளிழுத்து விட்டு மூன்று அல்லது நான்கு லிட்டர் காற்றை மட்டும் வெளியேற்றினால் மீண்டும் பழைய அளவு வெளிக்காற்றை உள்ளிழுக்க சிரமம் ஏற்படும். இதனால் மூச்சு திணறல் ஏற்படும். நுரையீரல்களில் சளி அதிகம் இருப்பதால் மூச்சு உடல் முழுக்க செல்வதில்லை. இதுவே ஆஸ்துமாவாகின்றது. ஆஸ்துமாவிற்கு மூலகாரணம் சளி என்பதை நாம் உணர வேண்டும்.

சளி அதிகமாகும் பொழுது அதுவே காச நோயாக மாறி உயிருக்கே ஆபத்தாகின்றது. மேலும் உடலில் சளி அதிகமாகும் பொழுது உடல் மெலிந்துவிடும். மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடு வதற்கு காரணம் சளி அதிகமாவது தான். சிந்தனை தெளிவில்லை. வாழ்க் கையில் உற்சாகமாக வாழ முடிவதில்லை. உடலில் முதுகில், கழுத்து முதுகெலும்பில் வலி ஏற்படுகின்றது. இவ்வளவு உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும்.



லிங்க முத்திரை செய்முறை:-

முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். முதலில் இருநாசித் துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.

பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இறுக்கமாக வைத் துக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை பத்து நிமிடம் முதல் பதி னைந்து நிமிடங்கள் செய்ய லாம். முதலில் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பத்து நிமிட ங்கள் செய்யலாம். பின்பு ஒரு மாதத்தில் பதி னைந்து நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையில் இரண்டு கை விரல்களையும் இணைக்கும் பொழுது அக்கு பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. குறிப்பாக நமது உடலின் சூடு அதிகமாகி உடலில் உள்ள சளியை வெளிக் கொணர்கின்றது.



லிங்க முத்திரையின் மற்ற பலன்கள்:-

  • சுவாசப்பை நுரையீரல் வலுப்படும்.
  • உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • உடல் அதிக எடை குறையும்.
  • அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
  • நிறைய நபர்களுக்கு உடலில் உயிர்சக்தி(விந்து) வீரியம் குறைந்துகாணப்படுகின்றது. அதனால் புத்திர பாக்கியம் இல்லாமல் வாடுகின்றனர். இதற்குக் காரணம் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக செயல்படாததுதான். உடல் சூட்டை சமப்படுத்தும் லிங்க முத்திரை செய்தால் உடலில் உயிரோட்டமும், வெப்ப ஓட்டமும் சீராகயிருக்கும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker