சமையல் குறிப்புகள்புதியவை

கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

தேவையான பொருட்கள் :

  • கோதுமை ரவை – 200 கிராம்
  • கேரட் – 1
  • பீன்ஸ் – 10
  • குடைமிளகாய் – 1
  • நெய் – 2 டீஸ்பூன்
  • புதினா – கால் கட்டு
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – சிறிதளவு.




செய்முறை:

  • கேரட்டை துருவிக்கொள்ளவும்.
  • பீன்ஸ், குடை மிளகாய், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • உருட்டி வைத்த உருண்டைகளை நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
  • கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
  • சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker