உறவுகள்எடிட்டர் சாய்ஸ்

மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?

உலகம்  முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின் ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.

எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கிரியேட்டிவ் மூட்:

உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!

சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.

பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.

.உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.

இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.

ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள். செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.

மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள், பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.

ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker