சமையல் குறிப்புகள்

சூப்பரான வாழைப்பூ பணியாரம்

 

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி – கால் கிலோ
  • வாழைப்பூ – 1
  • கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப்
  • இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் – 2
  • தக்காளி – 1
  • நெய் – ஒரு கப் (சிறியது)




செய்முறை

  • வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • இவற்றுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும்.
  • நெய்யில் வாழைப்பூவை வதக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • பணியாரக் குழியில் நெய் விட்டு, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
  • சூப்பரான வாழைப்பூ பணியாரம் ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker