எடிட்டர் சாய்ஸ்

பெண்கள் விரும்பும் சத்துக்கள் குறையாமல் பழச்சாறுகளை தரும் புதிய வகை ஜூஸர்கள்

பழங்களை நன்றாகக் கழுவிவிட்டு அப்படியே கடித்து, மென்று மெதுவாகச் சாப்பிடும்போது அதிலிருக்கும் எல்லாச் சத்துக்களும் நம் உடலுக்கள் செல்கின்றது. ஆனால், பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதற்கு சில நேரங்களில் விருப்பப்படுகிறோம். ஜூஸாக்கும் பொழுது அதன் மெல்லிய தோல்களை அகற்றி விடுகிறோம். மேலும், நாம் உபயோகப்படுத்தும் மிக்ஸர்களில் ஜூஸ் போடும்பொழுது அவை சிறிது சூடாகின்றது. இதுபோன்ற காரணங்களால் சில வைட்டமின் சத்துக் களானது வெளியேறி விடுகின்றது.

இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல், நாம் பழங்களை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன சத்துக்களை இழக்காமல் எடுத்துக் கொள்கிறோமோ அதேபோன்று பழச்சாறுகளிலிருந்தும் எந்த சத்துக்களும் வெளியேறாமல் நமக்குத் தரும் விதமாக ஜூஸர்கள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.



பொதுவாக ஜூஸர்களில் இரண்டு வகை உள்ளது. அவை ஃபாஸ்ட் ஜூஸர், ஸ்லோ ஜூஸர். இதில், ஃபாஸ்ட் ஜூஸர் என்பவை பெரும்பாலான வீடுகளில் உபயோகப் படுத்தப்படும் சென்ட்ரிஃப்யூகள் ஜூஸர்கள். இவை, விரைவாக செயல்பட்டு பழச்சாறை எடுப்பதால் பழச்சாறனது சூடாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஸ்லோ ஜூஸர் அல்லது கோல்டு ப்ரஸ் ஜூஸர் அல்லது மேஸ்டிகேட்டிங் ஜூஸர் என்பவை பழங்களை மெதுவாக நாம் வாயில் மெல்வது போல் கசக்சிச் சாறைப் பிழிவதால் இவற்றில் பழச்சாறானது சூடாவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், பழத்தின் பெரும்பாலான வைட்டமின் சத்தை அப்படியே நமக்குச் சாறாக்கித் தருகின்றன.



* கோல்டு ப்ரஸ் ஜூஸர் என்று பிரபலமாக அழைக்கப்படும் இவை நார்மல் ஜூஸர்களை விட குறைந்த சத்தத்துடனேயே இயங்குகின்றன.

* அதே போல் இதன் மூலம் பிழிந்தெடுக்கப்படும் பழக்கூழும் மிகவும் தரமானதாக உள்ளது.

* இவை மிகவும் குறைந்த வேகத்தில் இயங்குவதால் அதிக பழக்கூழ், காய்கறிக் கூழைத் தர முடிகின்றது. இதனால், மிகவும் தரமான, சக்தி நிறைந்த உணவை நாம் உட்கொள்ளு கிறோம் என்ற திருப்தி நமக்கு ஏற்படு கின்றது.

இவ்வகை ஸ்லோ ஜூஸர்கள் இரண்டு விதமான வடிவங்களில் கிடைக் கின்றன.



* வெர்ட்டிகல் ஜூஸர்

* ஹரிஸான்ட்டல் ஜூஸர்

இந்த இரண்டு வகை ஜூஸர்களுமே சிறந்த வகையில் ஜூஸ்களைத் தயாரிக் கின்றன.

இதில் சிங்கிள் கியர் மற்றும் ட்வின் கியர் ஜூஸர்கள் உள்ளன. சிங்கிள் கியர் ஜூஸர் அளவில் சற்று சிறியது. டபுள் கியர் ஜூஸரானது அளவில் பெரியது. அளவில் பெரியதாக இருப்பதால் இவற்றில் போடப்படும் காய்கறி மற்றும் பழங்களிலிருந்து ஒரு சொட்டு சாறைக்கூட வீணாக்காமல் நமக்குத் தருகின்றது.

* இவ்வகை கோல்டு ப்ரஸ் ஜூஸர்களின் சிறந்த வடிவமைப்பு மற்றும் ஸ்டர்டி கட்டுமானத்தை வேறு எந்த ஜூஸர்களும் பிரதிபலிக்க முடியாது.

* அதேபோல் மிக நீண்ட உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன.

* இவற்றை சுத்தம் செய்வது எளிது. மிகக் குறைந்த நேரத்திலேயே சுத்தம் செய்து விடலாம்.

* அதிகமாக உபயோகப்படுத்தினாலும் உராய்வது, உடைவது, ஒடுங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.



நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருந்தால் இவ்வகை ஜூஸர்களை வாங்காமல் இருக்க மாட்டோம்.

இதன் விலையானது சற்று அதிகமாக இருந்தாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இவற்றை வாங்கலாம்.

இவ்வகை ஜூஸர்களில் பிழியப்படும் சாறானது மிகவும் சிறந்த தரம் மற்றும் சிறிதளவும் கசப்பு இல்லாமல் இருப்பது இதன் சிறப்பிற்கு ஒரு சான்று எனலாம்.

ட்வின் கியர் ஜூஸரானது காய்கறிகள், வெங்காயம் போன்றவற்றை மிகச் சிறப்பாக அரைக்கின்றது.

ஜூஸர்களின் உள்ளிருக்கும் சில பாகங்களை நம்மால் சரிவர சுத்தம் செய்ய இயலாது. ஆனால் அதுபோன்ற சமயங்களில் இவ்வகை ஜூஸர்களில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் அவை தாமாகவே அவற்றைச் சுத்தம் செய்து கொள்ளக்கூடிய சிறப்பம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு, வெள்ளை, சிவப்பு, கோல்டு மற்றும் க்ரே நிறங்களில் இவ்வகை ஜூஸர்கள் கிடைக்கின்றன.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker