சமையல் குறிப்புகள்
இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்
தேவையான பொருட்கள்:
- அதிமதுரம் – 5 துண்டுகள்
- தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
- சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
- தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
- ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை:
- அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
- மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
- இதனை ஆறவைத்து பருகலாம்.