ஆண்களின் தாம்பத்திய வாழ்விற்கு பல நன்மைகளை தர!….
ஏன் முக்கியம்..?
நாம் சாப்பிட கூடிய உணவை தான் நமது உடல் ஆற்றலாக மாற்றி கொள்கிறது. இவை சரியான வகையில் இல்லையென்றால் நம்மால் ஒரு சின்ன வேலை கூட செய்ய இயலாது.
இதனை சரியான முறையில் செய்து வருகிறது வைட்டமின்களும் தாதுக்களும். இதில் ஆண்களின் உடலுக்கென்று தனித்துவமான வைட்டமின்களும் உண்டு.
வைட்டமின் கே
நமது உடலில் எலும்புகள் இல்லையென்றால் அவ்வளவு தான். ஆண்களின் உடலுக்கு எலும்புகள் தான் அதிக வலுவை சேர்கின்றன.
இவற்றை பாதுகாக்கவே வைட்டமின் கே ஆண்களுக்கு தேவைப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் இது தேவைப்படுகிறது.
சாப்பிட கூடிய உணவுகள்..
வைட்டமின் கே-வை நம்மால் எளிதாக பெற்று விடலாம். அதற்கு முளைக்கீரை போன்ற கீரை வகைகளை உணவில் சேர்த்து கொண்டால் போதும்.
மேலும், ப்ரோக்கோலி, காலிபிளவர், முட்டை, இறைச்சி, கல்லீரல் ஆகியவற்றை ஆண்கள் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளவும்.
வைட்டமின் டி
எல்லா வகை வைட்டமின்களை காட்டிலும் இந்த வைட்டமின் டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதை சூரியனிடம் இருந்தே நம்மால் எடுத்து கொள்ள இயலும். தினமும் காலை அல்லது மாலையில் சூரிய ஒளியில் 15 நிமிடம் இருந்தால் போதும்.
சாப்பிட கூடியவை..
வைட்டமின் டி-யை நேரடியாக பெறுவதற்கு இந்த உணவு வகைகள் உங்களுக்கு உதவும். முட்டை, பால், பருப்பு வகைகள், மீன், மாட்டின் கல்லீரல் ஆகியவற்றில் இவை அதிகம் காணப்படுகின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
ஆண்கள் எப்போதுமே ஆற்றலுடன் இருக்க ஒமேகா 3 அவசியம். இவற்றை நாம் தினமும் உன்ன கூடிய உணவுகளில் இருந்து ஓரிரு விடலாம்.
ஒமேகா 3 ஆண்களின் தாம்பத்திய வாழ்விற்கு பல நன்மைகளை தர கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாப்பிட வேண்டியவை..
வால்நட்ஸ், சோயா பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், அவகடோ போன்றவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளதாம்.
ஆண்கள் தினமும் 2:1 லிருந்து 4:1 என்ற அளவு வரைக்கும் ஒமேகா 6s – ஒமேகா 3s எடுத்து கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் பி-12
ஆண்களின் உடலுக்கு அதிக ஆற்றலை தர கூடிய தன்மை இந்த வைட்டமின் பி12-யிற்கு உள்ளது.
ஆண்களை பலவித உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து இந்த வைட்டமின் டி தான் காக்கிறது. தாம்பத்தியத்தில் சிறந்த ஆற்றலுடன் செயல்படவும் இந்த வைட்டமின் முக்கியமானது.
சாப்பிட கூடியவை..
பால், யோகர்ட், கோழியின் மார்பு பகுதி, கடல் உணவுகள் ஆகியவற்றில் இவை அதிகம் காணப்படுகின்றன.
அசைவம் விரும்பி சாப்பிட கூடிய ஆண்கள் ஆடு அல்லது மாட்டின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சாப்பிடடால் நல்ல பலனை அடைய முடியும்.
ஐயோடின்
ஆண்களின் ஹார்மோன்களை சரியான முறையில் சுரக்க வைக்க இந்த ஐயோடின் மிகவும் முக்கியம். மற்ற ஊட்டச்சத்துக்களை காட்டிலும் இவை தான் ஆண்களின் ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கிறது.
இவற்றின் அளவு குறைந்தால் எதிர்ப்பு சக்தி குறைவு, எடை கூடுதல், தைராய்டு போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகும்.
சாப்பிட வேண்டிய உணவு..
ஐயோடினை முழுமையாக பெற ஒரு சில முக்கிய உணவுகள் தேவை. முக்கியமாக கடலில் இருந்து கிடைக்க கூடிய உணவுகள், முட்டை, பால், கடல் உப்பு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் ஆண்கள் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், மீனை வாரத்திற்கு 1 முறையாவது சாப்பிட வேண்டும்.