சமையல் குறிப்புகள்

அத்திக்காய் பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்

  • அத்திக்காய் – 1 கப்
  • பயத்தம் பருப்பு – 1/4 கப்
  • தக்காளி – 2
  • முழு பூண்டு – 1
  • வெங்காயம் – 2
  • பச்சைமிளகாய் – 4
  • உப்பு எண்ணெய் – தேவையான அளவு.




செய்முறை

  • அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்
  • பின்பு அதில் பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.
  • விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும்.
  • சூப்பரான அத்திக்காய் பருப்பு கூட்டு ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker