ஃபேஷன்

ஆண்களை அழகாக காட்டும் டி ஷர்ட்ஸ்

ஆண்களின் சௌகரிய ஆடை டி ஷர்ட்ஸ். அதை அணியும் விதத்தில்தான் ஸ்டைலும் இருக்கிறது. குறிப்பாக இந்த வகை டி ஷர்ட்ஸ்ஸ் வைத்திருந்தால் போதும் உங்கள் தோற்றத்தை நொடியில் அழகாக, கவர்ச்சியாக மாற்றலாம். டி ஷர்ட்ஸ் அணியும்போது மற்றொரு சிறப்பு என்னவெனில் உங்கள் வயதான தோற்றத்தில் அல்லாமல் இளமையாக தெரிவீர்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.

பிளெயின் டி ஷர்ட்ஸ் : நீங்கள் ஃபிட்டானவர் எனில் உடல் தோற்றத்தை வெளிப்படுத்த பிளெயின் டி ஷர்ட்ஸ் பொருத்தமாக இருக்கும். இதற்கு ஏற்ற ஜீன்ஸ் அணிந்துகொள்ளுங்கள். பிளெயின் டி ஷர்ட்ஸ் அணிந்து அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஷர்ட் அணிந்தால் பெப்பியான தோற்றம் கிடைக்கும்.

ஹென்லே டி ஷர்ட்ஸ் : ரவுண்ட் காலர் வைத்து பட்டன்கள் வைத்து வரும் இந்த டி ஷர்ட்ஸ் உங்களுக்கு மாஸ் தோற்றத்தை அளிக்கும். லாவண்டர், மஞ்சள் என லைட் ஷேட்ச் கொண்ட டி.ஷர்டுகளை அணியும்போது உங்கள் தோற்றமும் ரிச்சாக இருக்கும். இதற்கு ஜீன்ஸ், கார்கோ பேண்ட் அல்லது ஷார்ட்ஸ் அணிந்தாலும் எடுப்பாக இருக்கும்.



லாங் ஸ்லீவ் டி ஷர்ட்ஸ் : விண்டர் அல்லது டிராவலின் போது இந்த லாங் ஸ்லீவ் டி ஷர்ட்ஸ் எடுப்பாக இருக்கும். இதிலேயே பிரிண்டட், ஸ்ரைப்ஸ் கொண்ட டி ஷர்ட்ஸ்டுகளும் அணியலாம். இதனால் உங்கள் வயதும் குறைவாகத் தெரியும்.

பிரிண்டட் டி ஷர்ட்ஸ் : பிரிண்டட் டி ஷர்ட்ஸ்ஸ் ஒரு வகையான கம்யூனிகேஷன் சிக்னல் தரும். உங்களைப் பற்றிய ஸ்டேட்மெண்டை அளிக்கும். இதுவும் ஒருவிதத்தில் உங்களைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களை சட்டென பார்க்க வைக்கவும் உதவும்.

ஸ்ட்ரிப் டி ஷர்ட்ஸ் : கிளாசிக் தோற்றத்தை அளிக்க ஸ்ட்ரிப் டி ஷர்ட்ஸ்தான் பெஸ்ட். இந்த டி ஷர்ட்ஸ் அணிந்து எந்த வகையான ஸ்டைலையும் பின்பற்றலாம். இந்த டி.ஷர்டுகளுக்கு மேல் ஓவர் கோட் அணிந்தாலும் கச்சிதமாக இருக்கும். இதற்கு மேட்சாக ஜீன்ஸ் அணிந்துகொள்ளலாம்.

காலர் டி ஷர்ட்ஸ் : இது சற்று செமி ஃபார்மல் தோற்றத்தை உண்டாக்கும். பலரும் அலுவலகத்தில் கேசுவல் ஆடைகள் அணியலாம் என்றதும் முதலில் தேர்வு செய்வது காலர் டி ஷர்ட்ஸ்டுகள்தான். இதற்கும் ஜீன்ஸ் அணியலாம். பீச் லுக்கிற்கும் பொருத்தமான சாய்ஸ்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker