சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு விருப்பமான கேரட் தேங்காய் பர்ஃபி

தேவையான பொருட்கள் :

  • தேங்காய்த் துருவல் – கால் கப்
  • கேரட் துருவல் – கால் கப்
  • சர்க்கரை – ஒரு கப்
  • நெய் – தேவையான அளவு
  • ஏலக்காய் – 4 (பொடித்துக் கொள்ளவும்).




செய்முறை:

  • வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.
  • இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.
  • சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.
  • கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.
  • சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker