ஆரோக்கியம்புதியவை

அசிங்கமா இருக்கும் வயிறு, பின்பக்க சதையை குறைக்கனுமா? அந்த உடற்பயிற்சியை செய்திடுங்க

இன்றைய பலருக்கும் பெரும் தலையிடியாக உள்ளது உடல் எடை எப்படி குறைக்கலாம் என்ற யோசனை தான்.

இதனை ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.

அதிலும் பெரும் சவாலாக உள்ளது வயிறு, பின்பக்க சதையை குறைக்கப்பது தான். இதற்கு எத்தனையோ உடற்பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில எளிய முறை உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்.

அதிலும் பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg) என்ற பயிற்சி எளிய முறையில் வயிறு, பின்பக்க சதையை குறைக்க உதவுகின்றது.

தற்போது இந்தப்பயிற்சியை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

  • முதலில் தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும்.
  • இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.
  • இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும்.
  • இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும்.
  • இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல பலன் தரும்.
பலன்கள்

வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker