சமையல் குறிப்புகள்
வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் மார்குயுஸ்
தேவையான பொருட்கள்
- டார்க் சாக்லேட் – 600 கிராம்
- சர்க்கரை – 175 கிராம்
- முட்டையின் மஞ்சள் கரு – 6
- முட்டை – 6
- கோகோ பவுடர் – 70 கிராம்
- காபி – 10 மில்லி லிட்டர்
- கிரீம் – 500 கிராம்
- ராஸ்பெர்ரி – 50 கிராம்
- டார்க் சாக்லேட் – 200 கிராம்
- ஃப்ரஷ் கிரீம் – 100 மில்லி லிட்டர்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து அதில் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்.
- கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு மோல்டில் இதனை ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
- சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.
- மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.
- அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.
- சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.