சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் மார்குயுஸ்

தேவையான பொருட்கள்

  • டார்க் சாக்லேட் – 600 கிராம்
  • சர்க்கரை – 175 கிராம்
  • முட்டையின் மஞ்சள் கரு – 6
  • முட்டை – 6
  • கோகோ பவுடர் – 70 கிராம்
  • காபி – 10 மில்லி லிட்டர்
  • கிரீம் – 500 கிராம்
  • ராஸ்பெர்ரி – 50 கிராம்
  • டார்க் சாக்லேட் – 200 கிராம்
  • ஃப்ரஷ் கிரீம் – 100 மில்லி லிட்டர்




செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்.
  • கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு மோல்டில் இதனை ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  • சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.
  • மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.
  • அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.
  • சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker