சமையல் குறிப்புகள்
புரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
- பச்சரிசி மாவு – ஒரு கப்
- சோயா பீன்ஸ் – அரை கப்
- கடுகு – அரை டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- பச்சை மிளகாய் – 4
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- தண்ணீர் – ஒன்றரை கப்
- எண்ணெய் – 4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- சோயா பீன்ஸை ஊற வைத்து ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும்.
- கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
- கடாயில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
- இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும்.
- ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.
- தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.