சமையல் குறிப்புகள்
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2
- கொண்டைக்கடலை – 1 கப்
- நெய் – 2 ஸ்பூன்
- சீரக விதைகள் – 1ஸ்பூன்
- மஞ்சள் – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- மசித்த தக்காளி – 2
- மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,
- தனியா பொடி – 1 ஸ்பூன்,
- வெந்தய தூள் – 1 ஸ்பூன்,
- கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – தேவையான அளவு
- கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
செய்முறை :
- உருளைக்கிழங்கை வேகவைத்து வெந்ததும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
- கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி சாறை ஊற்றிக் கிளற வேண்டும். சிம்மில் வைத்து ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை வதக்க செய்யலாம்.
- தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உங்களுடைய தேவைக்கு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்க செய்யலாம்.
- மேற்சொன்ன மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
- மசாலாவை பொறுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- மசாலா நன்கு வேகும் பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
- கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!
- நீங்கள் விரும்பிய பூரி, சப்பாத்தி அல்லது நாண் உடன் மசாலாவை வைத்து உண்ணுங்கள் இது அதீத சுவையாக இருக்கும்.