சமையல் குறிப்புகள்

சத்தான டிபன் ஓட்ஸ் கேரட் பான்கேக்

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • கேரட் -2
  • வெங்காயம் – 1
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • மிளகு தூள் – ஒரு சிட்டிகை
  • தண்ணீர், நெய், உப்பு – தேவையான அளவு




செய்முறை

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, கேரட் துருவல், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே மாவை ஊற விடவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
  • சத்தான சுவையான ஓட்ஸ் பான்கேக் ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker