தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தை பேச தொடங்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை

சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம். குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.



குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.

முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும். ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும்.

பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும். என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.



குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம். அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.

குழந்தைக்கு 2 வயதாகியும் பேசவரவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அலட்சியம் வேண்டாம்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker