அழகு..அழகு..

கூந்தலுக்கு தேவைப்படும் எண்ணெய் மசாஜ்

உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது என்பது, இந்தியப் பெண்களால் அறியப்பட்ட பரம்பரை இரகசியம். இது உங்கள் கூந்தலுக்கு பளபளப்பை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக கூந்தலில் ஏற்படும் தளர்வு மற்றும் மன அழுத்தம் என நேரடி மற்றும் மறைமுகமான ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது உறுதிசெய்யப்பட்ட ஒன்று என்பது காலம் காலமாக அறியப்படுகிறது.

புரத்தின் காரணமாக கூந்தல் வளர்கிறது. கூந்தல் நன்கு வளர்வதற்கு போதுமான விட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் தேவை. இதில் கூந்தலில் செயல்படுத்தும் எண்ணெய் ஒரு முகவராக மட்டுமே செயல்படுகிறது. எண்ணெய் மசாஜ் செய்வதனால், உச்சந்தலையைச் சுத்தப்படுத்தி துளைகள் திறக்க காரமாகிறது. வழக்கமான எண்ணெய் கூந்தலில் சிக்கல் மற்றும் சேதத்தையும் விளைவிக்கிறது. ஆனால், இந்துலேகா பிரிங்கா ஆயில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வேர்களை உறுதிப்படுத்துகிறது மற்றும் கூந்தல் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்துகிறது.



தட்டையான கூந்தல், வறட்சியான கூந்தல் அல்லது பிளவு ஏற்படும் கூந்தல், கூந்தல் உதிர்தல் ஆகியவை பலவீனமான வேர்கள் இருப்பதை குறிக்கிறது. இந்தமாதிரியான கூந்தல் இருப்பதற்கு குளிச்சியான வெப்பநிலைகள், சரியான உணவு இல்லாதது. ஸ்டைலிங் கருவிகள் பயன்படுத்துதல், சில கூந்தல் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவற்றினால் ஏற்படலாம்.ஒரு நாளைக்கு 100 முதல் 150 முடிகள் இழக்க நேரிடும். நீங்கள் அதிகம் கூந்தலை இழக்கிறீர்கள் என்றால், எண்ணெய் மசாஜ் தொடங்கவும். இதனால், ரத்தஓட்டம் அதிகரித்து, துளைகள் ஏற்பட்டு வேர்கள் பலப்படும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

பெண்கள் கூந்தலை அலசுவதற்கு முன்பு எண்ணெய் மசாஜ் செய்தால் கூந்தலை பாதுகாக்கலாம். கூந்தலில் நாம் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர், தட்பவெட்பநிலை மாற்றங்கள், கெமிக்கல் பொருள்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடுகள் ஆகியவற்றின் மூலம் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. எலுமிச்சை மற்றும் சீயக்காய் தேய்ப்பதனால் உச்சந்தலையில் உள்ள நுண்துகள்கள் பெரியதாக ஏற்பட்டு, அதன் மேற்புற அமைப்பு சேதமடைந்திருக்கும். தண்ணீரில் பல வகைகள் உள்ள சில நீரை கூந்தல் அலச பயன்படுத்துவதால், அதன் மூலக்கூறுகள் கூந்தலின் தண்டுகளின் வழி புகுந்து முடி உதிர்வை அதிகரிக்கலாம். சில நேரம் கூந்தலின் அடுக்குகள் பாதிப்பதால் கூந்தல் சுருண்டு கிடக்கும். இவற்றிலிருந்து பாதுகாக்க எண்ணெய் மசாஜ் பயன்படும்.



சுருள் கூந்தல் என்பது ஆரோக்கியமான கூந்தலின் கவர்சிகரமான சிறப்புகளில் ஒன்றாகும். இந்த மாதிரியான கூந்தலுக்கு உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் தலையில் உள்ள செதில் அமைப்புகளை தடுக்க உதவுகிறது. இதனால், கூந்தலின் தண்டு ஹைட்ரோபோகிக் ஏற்பட்டு கூந்தல் பளபளப்பை தருகிறது. இதன் மூலம் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பு தன்மையுடனும் காட்சியளிக்கும். எனவே, எண்ணெய் சிகிச்சை செய்வதன் மூலம் எண்ணெய் உரிஞ்சப்பட்டு, பிளவ முடிகள் ஏற்படாமல் தடுத்து, முடி உதிர்வையும் தடுத்து நிறுத்தும். சுருள் கூந்தல் வைத்திருப்பவர்கள் எண்ணெய் மசாஜ்க்கு தயாராகுங்கள்.

உச்சந்தலையில் தோல் துளைகளில் அடைப்பு இருந்தால், பாக்டீரியா அல்லது பூச்சை தொற்றுகள் மற்றும் அரிப்பு எரிச்சல் போன்ற பெரிய சிக்கல்கள் ஏற்படும். சில நேரங்களில் நோய் தொற்று தலைவலிக்கு வழிவகுக்கும். கூந்தல் உதிர்வதற்கும் காரணமாக அமைந்துவிடும். அதனால், உச்சந்தலையில் தேன் மற்றும் இயற்கை எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலமாக நோய் தொற்றுகளை அறவே அகற்ற முடியும். உங்கள் உச்சந்தலையில் பல இடங்களில் மென்மையான அல்லது சிவப்பு புள்ளிகள் உருவாகி இருப்பதை கவனிக்க நேர்ந்தால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.



காலநிலை மாற்றங்களால் மற்றும் சுற்றுப்புற சீர் கேட்டினால் பல பெண்களின் உச்சந்தலையில் பொடுகு அறிகுறிகள், முடி உடைதல் மற்றும் கூந்தல் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொடு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் தொகுப்பு ஆகும். குறிப்பாக வறண்ட கூந்தலில் உள்ள தோல் சுரப்பிகளில் இருந்து காட்சியளிக்கும். எனவே, எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலமாக சுரப்பிகளை தூண்ட முடியும். தலையில் இயற்கையான எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவும். அதிக எண்ணெய்யை துணியால் துடைப்பதை தவிர்க்க வேண்டும். இது கூந்தல் வளர்ச்சியை தடுக்கும். எனவே, சில இயற்கைப் பொருள் நிறைந்த ஷாம்பு மூலம் கூந்தலை அலசினால் உங்கள் கூந்தல் சமநிலை அடையலாம்

சிலருக்கு முதிர்ச்சியடைந்த கூந்தல் சாம்பல் நிறத்தில் காணப்படும். இது இன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியர்கள் என அனைவருக்கும் உள்ள பிரச்சனை ஆகும். இது, பொதுவாக வைட்டமின் மற்றும் புரத குறைபாடுகளால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண கிரேயின் பங்களிப்பு நல்ல பலன்களைத் தரும். அதாவது, இதில் உள்ள உட்பொருள்கள் தோலில் உள்ள மெலனை அதிகரித்து, அதன் வழக்கமான நிறத்தைக் கொடுக்கிறது. மெலன் சுரப்பி அதிகரிப்பால் கருத்த முடியையும். மெலன் குறைவதால் சாம்பல் கூந்தலையும் ஏற்படுத்துகிறது. இதை கிரேயின் நிவர்த்தி செய்கிறது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker