சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்
தேவையான பொருட்கள் :
- பச்சரிசி மாவு – அரை கப்
- சாக்லேட் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 10 (சிறிதாக நறுக்கவும்)
- நெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- தண்ணீர் – 1 கப்
செய்முறை:
- அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.
- பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.
- பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
- அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.