சமையல் குறிப்புகள்
மீன் புட்டு
தேவையான பொருட்கள்:
- மீன் – அரைகிலோ
- இஞ்சி – 1 துண்டு
- பெ.வெங்காயம் – அரைகிலோ
- பச்சை மிளகாய் – 5
- பூண்டு – 5 பல்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.
- அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறுதீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
- சுவையான மீன் புட்டு தயார்.