சமையல் குறிப்புகள்
சூப்பரான மட்டன் எலும்பு சால்னா
தேவையான பொருட்கள் :
- மட்டன் எலும்பு – 1 கப்
- துவரம் பருப்பு – 1/2 கப்
- கடலைபருப்பு – 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
- தக்காளி – 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
- பிரிஞ்சி இலை – 1
- பட்டை – 1
- கிராம்பு – 1 – 2
- வெங்காயம் – 1/2 கப்
- தக்காளி – 1/4 கப்
- கத்தரிக்காய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
- மல்லி பொடி – 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- மட்டன் எலும்பை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன், மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்) விட்டு வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
- அடுத்து அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,
- பின் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.
- பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் எலும்பு சால்னா ரெடி