சமையல் குறிப்புகள்
சுவையான சிக்கன் மக்ரோனி செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 200 கிராம்
- மக்ரோனி – ஒரு கப்
- சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு – 2 டீஸ்பூன்
- வெங்காயம் – ஒன்று
- இஞ்சி – ஒரு துண்டு
- பூண்டு – 10
- பச்சை மிளகாய் – 1
- குடை மிளகாய் – 1
- இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
- தக்காளி – ஒன்று
- மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
- தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் துகள் – 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
- மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.
- பின்னர், சிக்கன் துண்டுகள், மக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
- இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும்.
- சுடச்சுட சிக்கன் மக்ரோனி ரெடி..!