சமையல் குறிப்புகள்

எள்ளு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்

  • மட்டன் – ½ கிலோ
  • மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • தயிர் – ¼ கப்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  • எள்ளு – 2 ஸ்பூன்
  • பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 2 துண்டு
  • நட்சத்திர மொக்கு – 1
  • முந்திரி – 6
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • காய்ந்த மிளகாய் – 4
  • பூண்டு – 10 பல்
  • முருங்கைக்காய் – 1
  • உருளை கிழங்கு – 1
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை

  • கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, முறுங்கைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
  • பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
  • வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவு்ம்.
  • மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்.
  • பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.
  • மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான எள்ளு மட்டன் குழம்பு ரெடி





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker