சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாஷ் பிரவுன்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு – 2 (பெரியது),
  • மைதா – 3 டேபிள் ஸ்பூன்,
  • மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
  • வரமிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு,
  • நெய் (அல்லது) எண்ணெய் – 2 டீஸ்பூன் (உருளைக்கிழங்கை வதக்க),
  • எண்ணெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு,
  • வெங்காய பொடி – 1 டீஸ்பூன் (தேவையெனில்),
  • செடார் சீஸ் (optional) – 2 டேபிள் ஸ்பூன்.



செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து துருவி அதை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதை வடிகட்டி வைக்கவும்.
  • பின் அதை ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் (அல்லது) எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • இந்த கலவை ஆறிய பின் அதில் உப்பு, மைதா, மிளகுத்தூள், வரமிளகாய்த்தூள், செடார் சீஸ், வெங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கட்லெட் போல் தட்டி (முக்கோண வடிவம்) கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்தவற்றை போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து சூடாக சாஸுடன் பரிமாறவும்.
  • இது காலை உணவுக்கு உகந்தது.
  • சூப்பரான ஹாஷ் பிரவுன் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker